Thursday, May 5, 2016

உனக்கென்ன மேலே நின்றாய்!!

வாரும் பாரதியே!
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் என்றீர்,
சேலை போர்த்திய பதுமையைக்கூட,
காம கண்கொண்டு பார்க்கும் இக்கயவர்கள், நாயை விட இழிவானவர்களோ??

விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம் என்றீர்,
எமது வீரமும் எம் வீட்டினரின் பயமும் ஒரு சேரக் கூடியது.
இவ்வஞ்சகர்களால், எமது நிலைமை,
அடுப்பூதும் பெண்கட்கு படிபெதற்கு என்று மறுபடியும் ஆகிவிடுமோ??

இக்காம வெறியர்களால், எமது நிமிர்ந்த நடையும் கூனியது,
நேர்க் கண்ட பார்வையும் குருடாகியது!
நேற்றோ நிர்பயா! இன்று  ஜிஷா!
நாளை யாரோ??

எனக்கென்ன என்று மேலே நின்று பாராமல்
தெய்வத்திற்கு தெய்வமாயிருந்து,
இம்மிருதர்களை தண்டித்து,
பார் போற்றும் ரதிகளாக,
எம் பெண்களைத் திகழச் செய்வீர்!!